நாம் தினமும் பல விதமான விளம்பரங்களை, பல விதமான ஊடகங்களில் பார்க்கிறோம். அவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து, வேலை வாய்ப்புகள் வரை அடக்கம். மேற்கண்ட புகைப்படம், சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்தது...
No Smoking என்பதன் Spelling கூட தெரியாத இவர்கள் வேலை கொடுக்கப் போகிறார்களாம். அந்த வேலையைப் பெறப்போகும் மக்கள் நிலைமையை நினைத்தால்... ஐயோ! பாவம்!
மேலும், 'தொடர்புக்கு' என்று கூட ஒழுங்காக அச்சிடத் தெரியாத இவர்களைப் பற்றி நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது...
ஆங்கிலேயர்களிடம் இப்படிப் பேசிப் பேசித் தான் அவர்களை ஒட ஒட விரட்டியிருப்போமோ!
இந்த விளம்பரம், ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த், தனது பண்ணைக்கு படித்த இளைஞர்களை தேர்வு செய்த காட்சியை நினைவுபடுத்தியது... நீங்களும் அந்த காமெடிக் காட்சியை கீழே உள்ள வீடியோவில் கண்டு ரசியுங்களேன்...
No comments:
Post a Comment