Web Informer Button

Election Jokes - AAP - 20k for dinner - English


I salute and admire the AAP leader Arvind Kejriwal. The way he started the party, coming under the belief of majority of the people, becoming a Chief Minster of our country's capital are not possible by any other person. His political journey is like the movie 'Mudhalvan'.

In the coarse of the journey, his announcement about joining dinner with him for Rs. 20000/- is a new approach. Inspite of that, enjoy this mokkai...

This mokkai is created just for fun! Not to hurt any one. Inorder to ensure this mokkai should not have an impact in voting, we are publishing this mokkai in our website indruorumokkai.com after polling was completed...


Tamil Version here...



Election Jokes - AAP - 20k for dinner - Tamil

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நான் மிகவும் மரியாதை மற்றும் மதிப்பு வைத்துள்ளேன். அவர் கட்சி ஆரம்பித்த விதமும், குறுகிய காலத்தில், மக்களின் செல்வாக்கைப் பெற்று, நமது தலைநகரின் முதல்வர் ஆனது, இது வரை யாருமே சாதிக்காதது. 'முதல்வன்' திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது, அவரின் இந்தப் பயணம்.

இந்நிலையில், 'கட்சி வளர்ச்சி நிதிக்காக, ரூபாய் 20000/- கொடுத்தால் அவருடன் விருந்து உண்ணலாம்' என்ற அறிவிப்பு மிகவும் புதுமையானதாக இருந்தபோதிலும், அதன் மூலம் உருவாகியுள்ள இந்த மொக்கையைப் படித்து ரசியுங்களேன்...

இந்தப் படைப்பு, வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இந்தப் படைப்பு, தேர்தலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே வாக்குப்பதிவு முடிந்த பிறகு நமது தளமான Indru Oru Mokkai-யில் வெளியிடப்படுகிறது...

English version here...

Dearness Allowance Drama (அகவிலைப்படி அராஜகம்)



தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10% உயர்த்தி, 100% வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி என்பது நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஒவ்வொரு நகரத்தின் வாழ்க்கை முறை மற்றும் செலவுகளை வைத்து கணக்கிடப்பட்டு இரண்டாம் உலகப் போர் காலம் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் என்னைப் போன்றவர்களுக்கு பல விடை தெரியா கேள்விகளை எழுப்புகிறது…


1) அகவிலைப்படியை 100% பெற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வை முதல்வர் கட்டுப்படுத்தவில்லை என்று அரசு ஊழியர்கள் எப்படி கூறலாம்? அதற்கு பதிலாகத் தானே இது?

2) விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியை 100% பெற்றுக்கொண்டு, பெட்ரோல், ரேஷன், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும், சலுகைகளையும் அரசு ஊழியர்கள் எப்படி அனுபவிக்கலாம்?

3)  விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் அப்படி எதுவும் பெறாமல் எப்படி விலைவாசி உயர்வை சமாளிப்பர்?

4) நஷ்டத்தில் இயங்கும் அரசே, அதன் ஊழியர்களுக்கு இவ்வளவு அகவிலைப்படியை வழங்க முடியும் போது, லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் ஏன் வழங்க முடியாது?

5) அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தினால், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை சட்டமாக்க முடியாதா? அரசு ஊழியர்களை விட எந்த விதத்தில் நாங்கள் குறைந்தவர்கள்?